லடாக்கின் இந்திய – சீன எல்லையில் இந்திய ராணுவம் மேற்கொண்டுள்ள மேம்பாட்டு பணிகளால் சீன ரானுவத்துடன் சில வாரங்களுக்கு முன்னதாக மோதல் எழுந்தது. இதனால் எல்லையில் இருநாட்டு படைகளும், ராணுவ தளவாடங்களும் குவிக்கப்பட்டன. இதனால் இரு நாடுகளுக்கு இடையேயும் போர் பதட்டம் எழுந்த நிலையில் இரு நாடுகளுக்கு இடையே சமாதான பேச்சு வார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதை தொடர்ந்து இரு நாட்டு ராணுவமும் தங்கள் எல்லைப்பகுதியிலிருந்து கணிசமான வீரர்களை திரும்ப அழைத்துக் கொண்டுள்ளன. ஆனால் பக்காங் சோ, தவுலத் பெக் ஒல்டி ஆகிய பகுதிகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ராணுவ துருப்புகள் திரும்ப பெறப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.