''இந்தியா'' கூட்டணி குழு மணிப்பூர் மாநிலத்திற்கு நேரில் செல்ல முடிவு

வியாழன், 20 ஜூலை 2023 (14:01 IST)
''இந்தியா'' கூட்டணி பிரதிநதிதிகள் குழு மணிப்பூர் மாநிலத்திற்கு நேரில் செல்ல முடிவெடுத்துள்ளது.

மணிப்பூரில் இரண்டு பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக பல ஆண்களால்  வன்முறை செய்த  வீடியோ இணையத்தில் வெளியாகி பரவலாகி ஆகி வருகிறது.

இந்த கொடூர சம்பவம் மூன்று மாதங்களுக்கு முன்னர் நடந்திருந்தாலும் மணிப்பூரில் இணையம் தடை செய்யப்பட்டிருந்ததால் தற்போது தான் இந்த வீடியோ வெளியாகி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வன்முறை சம்பவம் பற்றி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி TY. சந்திரசூட் , பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

''மணிப்பூரில் கலவரம் தொடர்பாக ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க சிறிது கால அவகாசம் தருவோம். அப்போதும் நடவடிக்கை எடுக்கத்தவறினால்,  உச்ச நீதிமன்றம் இவ்விவகாரத்தைக் கையில் எடுக்க நேரிடும்''…என்று    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் எச்சரித்திருந்தார்.

இந்த  நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக ஐக்கிய முற்போக்கு கூட்டணியில்  காங்கிரஸ் தலைமையில் இடம்பெற்ற திமுக, திரிணாமுல் காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, ராஸ்டிரிய  ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய, சமாஜ்வாதி உள்ளிட்ட  26 எதிர்க்கட்சிகள்  ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள  I.N.D.I.A (Indian National Democratic Inclusive Alliance)   ''இந்தியா'' கூட்டணி பிரதிநிதிகள் மணிப்பூர் மாநிலம் செல்ல முடிவெடுத்துள்ளனர்.

இரண்டு மாதங்களுக்கு மேலாக நீடித்து வரும்  மணிப்பூரில்  நேரில் சென்று ஆய்வு செய்ய இந்தியா கூட்டணி கட்சி பிரதிநிதிகள் முடிவெடுத்துள்ளனர்.

ஏற்கனவே காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மணிப்பூர் சென்று மக்களை சந்தித்த நிலையில், எதிர்க்கட்சிகள் குழு மணிப்பூர் செல்லவுள்ளது.

''இந்தியா'' கூட்டணி குழு  நாளை மறு நாள் ( ஜூலை 22 ஆம் தேதி) மணிப்பூர் செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்