மணிப்பூர் மகள்களுக்கு ஏற்பட்டதை மன்னிக்க முடியாது: ஒரு குற்றாவளியும் தப்பிக்க முடியாது: பிரதமர் மோடி..!
வியாழன், 20 ஜூலை 2023 (12:32 IST)
மணிப்பூர் மகள்களுக்கு ஏற்பட்டதை மன்னிக்கவே முடியாது என்றும் எந்த குற்றவாளியும் தப்பிக்க முடியாது என்றும் பிரதமர் மோடி ஆவேசமாக கூறியுள்ளார்.
மணிப்பூரில் இரண்டு பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக பல ஆண்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது
இந்த கொடூர சம்பவம் மூன்று மாதங்களுக்கு முன்னர் நடந்திருந்தாலும் மணிப்பூரில் இணையம் தடை செய்யப்பட்டிருந்ததால் தற்போது தான் இந்த வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து கூறிய பிரதமர் மோடி மணிப்பூரில் பெண்கள் அவமதிக்கப்பட்ட சம்பவம் இந்தியாவில் உள்ள 140 கோடி மக்களையும் அவமானத்தில் ஆழ்த்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் மணிப்பூர் மகள்களுக்கு ஏற்பட்டதை மன்னிக்கவே முடியாது என்றும் எந்த குற்றவாளிகளும் தப்ப மாட்டார்கள் என நாட்டு மக்களுக்கு உறுதி அளிக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.