தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கீத கோவிந்தம், தேவ்தாஸ், டியர் காம்ரேட், சுல்தான்,. புஷ்பா, வாரிசு, அனிமல் ஆகிய படங்களில் நடித்து இந்திய அளவில் பிரபலமாக உள்ளார். இந்த நிலையில், ஏஐ தொழில் நுட்பத்தால் ஆபாசமாக உருவாக்கப்பட்ட தனது DeepFake Edit வீடியோ இணையதளத்தில் வைரலானது.
இந்த டீப் பேக் வீடியோவால், கஜோல், கத்ரினா, பிரியங்கா சோப்ரா முதல்வர் யோகி ஆதித்ய நாத் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இப்போது மீண்டும் ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், ஆபாசமாக நடனமாடும் ஒரு பெண்ணின் முகத்தை எடி செய்து, ராஷ்மிகாவின் முகத்தை அதில் இணைத்துள்ளனர்.