’குழந்தைகளை பள்ளிக்கு’ அனுப்பினால் ’ரூ,15,000 பணம் ’வழங்கப்படும் - முதல்வர் அதிரடி

சனி, 15 ஜூன் 2019 (18:11 IST)
சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஆந்திர மாநில சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள  175 தொகுதிகளில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 151 இடங்களில் வெற்றிபெற்றது. இதையடுத்து அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி கடந்த மாதம் 30 ஆம் தேதி ஆந்திர மாநிலத்தின் முதல்வராகப் பதவியேற்றார். அதற்காக பதவியேற்பு விழாவின் போது திமுக ஸ்டாலின் கலந்துகொண்டார்.
ஆந்திர மாநிலத்தில் புதிய முதல்வராகப் பதவியேற்றுள்ள ஜெகன்மோகன் ரெட்டி பல அதிரடியான திட்டங்களைச் செயல்படுத்திவருகிறார். இவருடைய பல புதிய அறிவிப்புகளால் மக்களின் மனதில் இடம் பிடித்துவருகிறார்.
 
ஏற்கனவே ஆந்திர மாநிலத்தில் 5 துணைமுதல்வர்களை நியமித்து நாட்டையே  ஆந்திராவின் திரும்பி பார்க்கவைத்தார். பின்னர் 5 துணை முதல்வர்கள் மற்றும் பிற அமைச்சர்கள் கடந்த 5 ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டனர்.
 
இந்நிலையில் தற்போது ஆந்திர மாநிலத்தில் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் ஏழைத்தாய்மார்களுக்கு 15,000 ரூபாய் வழங்குவதாகவும் அறிவித்துள்ளார்.
 
மேலும் ஆந்திராவில் உள்ள  40ஆயிரம் அரசுப்பள்ளிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்கப்படும் அதேசமயம்- தெலுங்கு கட்டாய பாடமாகக் கற்பிக்கப்படும் என்றும், தற்போது 33% மக்கள் கல்வியற்றவர்கள் ஆக உள்ளதை மாற்றவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
 
முக்கியமாக ஆந்திர மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமுல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். 
 
இந்த திட்டங்களை அனைவரும் வரவேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்