தற்போது வங்கிகளில் டெபாசிட் காப்பீடு உச்ச வரம்பு 1 லட்சமாக இருக்கிறது. அதாவது நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி திடீரென திவாலானால் நீங்கள் எவ்வளவு பணம் வங்கியில் டெபாசிட் செய்திருந்தாலும் ஒரு லட்சம் மட்டுமே கிடைக்கும். ஒரு லட்சத்திற்கு குறைவாக டெபாசிட் செய்பவர்களுக்கு அந்த தொகைதான் திரும்ப கிடைக்கும்.
இந்நிலையில் டெபாசிட் காப்பீட்டை 1 லட்சத்திலிருந்து உயர்த்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டமிட்டுள்ளார். வரி விகிதங்கள், வருமான வரி போன்றவற்றில் மாற்றம் செய்ததை கருத்தில் கொண்டு 5 லட்சம் வரை அதிகபட்ச டெபாசிட் காப்பீடாக வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.