ஒரே தவணையில் ரூ.9000 கோடியை செலுத்த தயார்! விஜய் மல்லையா அறிவிப்பு

சனி, 11 மார்ச் 2017 (05:36 IST)
பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் சுமார் ரூ.9000 கோடி கடன் வாங்கிவிட்டு அதனை கட்டாமல் இங்கிலாந்து நாட்டுக்கு தப்பியோடிவிட்டார். அவரை இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.



 


இந்நிலையில் விஜய்மல்லையா மீது பல்வேறு நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் அவர் நேரடியாக ஆஜராக நீதிமன்றங்கள் உத்தரவிட்டன. ஆனால் எந்த உத்தரவுக்கும் கட்டுப்படாமல் விஜய் மல்லையா தொடர்ந்து இங்கிலாந்தில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் தான் வாங்கிய கடனான மொத்த பணத்தையும் அதாவது சுமார் ரூ.9000 கோடியையும் ஒரே தவணையில் கட்டத்தயார் என்று விஜய் மல்லையா அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதுகுறித்து நேற்று விஜய் மல்லையா தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: கடன் வாங்குபவர்களுக்கு ஒரே தவணையில் செட்டில்மென்ட் செய்யும் கொள்கையை பொதுத்துறை வங்கிகள் கடைப்பிடிக்கின்றன. நூற்றுக்கணக்கான கடனாளிகள் இந்த வசதியை பயன்படுத்தியுள்ளனர். ஆனால் எங்களுக்கு இந்த வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன்?. கணிசமான தொகையை வழங்க முன்வருவதாக உச்ச நீதிமன்றத்தில் முன்பு தெரிவிக்கப்பட்டபோது, வங்கிகள் அதை பரிசீலனைக்கு கூட எடுத்துக்கொள்ளவில்லை. எனவே, நேர்மையான முறையில் கடனை தீர்க்க பேச்சுவார்த்தை நடத்த நான் தயாராக இருக்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்