பிரிந்த மனைவிக்கு ஜீவனாம்சம் தர தேவையில்லை - எப்போது தெரியுமா?

வியாழன், 7 செப்டம்பர் 2017 (11:44 IST)
மனைவியின் நடத்தை சரியில்லை எனில் அவருக்கு ஜீவனாம்சம் கொடுக்க தேவையில்லை என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.


 

 
பண்டாரா பகுதியை சேர்ந்த ஒரு தம்பதி பரஸ்பர சம்மதத்துடன் ஏற்கனவே விவாகரத்து பெற்றுள்ளனர். அந்நிலையில், மனைவிக்கு ரூ.3 ஆயிரம் ஜூவனாம்சம் கொடுக்க வேண்டும் என கீழ் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், மனைவியின் நடத்தை சரியில்லை என்பதாலேயே அவரை விட்டு நான் பிரிந்தேன். எனவே, அவருக்கு ஜூவனாம்சம் கொடுப்பதில் எனக்கு விருப்பமில்லை. எனவே அதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
 
பொதுவாக விவாகரத்து சட்டப்பிரிவு 125ன் படி, பாதிக்கப்படும் மனைவிக்கு கணவர் ஜூவனாம்சம் கொடுப்பது கட்டாயம். ஆனால், 4ம் உட்பிரிவின் படி மனைவியின் நடத்தை சரியில்லை எனில், அவருக்கு ஜீவனாம்சம் வழங்க தேவையில்லை என சட்டம் சொல்கிறது.
 
எனவே, அதன் படி, அவரின் மனைவிக்கு ஜூவனாம்சம் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்து மும்பை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்