மர்மாக இறந்த நடிகையின் வீட்டில் போதை பொருட்கள் ! கணவர் கைது !

சனி, 14 மே 2022 (17:01 IST)
கேரளாவில்  நேற்று மலையாள நடிகை ஒருவர்  வீட்டிற்குள் பிணமாக கிடந்தார். இதுதொடர்பாக  அவரது கணவரை போலீஸார் கைது செய்துள்ளனர். 

கேரள மா  நிலம் காசர்கோட்டை பகுதியில் வசித்து வந்தவர் ஷகானா(20). இவர் பிரபல மாடல் அழகியான இவர், மலையாள சினிமாவில் நடித்துள்ளார்.

இவர் கடந்தா ஆண்டு சஜ்ஜாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவரும் கோழிக்கோட்டியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இன்று காலை அவரது அறையில் இருந்து வெளியே வரவில்லை என்பதால், அவரது கணவர் அவரது அறைக்குச் சென்று பார்த்தார். அபோது ஷகானா தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து போலிஸுக்கு தகவல் கொடுத்தார். உடனே சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் பிணத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பு வைத்தனர்.

பிரேத பரிசோதனையில், சகானாவில் உடலில் சிறு காயங்கள்  இருந்துள்ளது. இதுகுறித்த அறிக்கையை போலீஸாரிடம் மருத்துவர்கள் அளித்துள்ளனர்.

நடிகை சகானாவின் படுக்கை அறையை போலீஸார் சோதனை செய்தனர், அங்கு, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் இருந்தது. அதைக் கைப்பற்றிய போலீஸார் விசாரணை தீவிரப்படுத்தினர்.

அதில், சகானாவும் அவரது கணவரும் அடிக்கடி சண்டை போட்டதாகவும், அதனால் அவர்களை வீட்டை விட்டுக் காலி செய்யும்படி வீட்டு உரிமையாளர் கூறியதாகவும் கூறப்படுகிறது.  எனவே சகானாவின் கணவன் சஜாத்தை போலீஸார் கைது செய்தனர். நேற்று அவரிடம் விசாரித்த போலீஸார் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்