துணை குடியரசு தலைவருக்கு யார் யார் ஓட்டு போடுவார்கள்?

புதன், 19 ஜூலை 2017 (06:00 IST)
குடியரசு தலைவர் தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் மற்றும் ராஜ்யசபா எம்பிக்கள் ஆகியோர் வாக்களிப்பார்கள். ஆனால் துணை குடியரசு தலைவர் தேர்தலில் ராஜ்யசபா மற்றும் லோக்சபா எம்பிக்கள் மற்றும் நியமன உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிப்பார்கள். அதாவது  ராஜ்யசபா உறுப்பினர்கள் 233 பேர், ராஜ்யசபா நியமன உறுப்பினர்கள் 12 பேர் மற்றும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட லோக்சபா உறுப்பினர்கள் 543 பேரும், லோக்சபா நியமன உறுப்பினர்கள் 2 பேரும் என மொத்தம் 790 பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள்.



 
 
துணை குடியரசு தலைவர் என்பவர் குடியரசு தலைவர் நாட்டில் இல்லாதபோது அல்லது எதிர்பாராத வகையில் மரணம் அடைந்துவிட்டாலோ குடியரசு தலைவரின் பணிகளை கவனிப்பார். மேலும் இவர் தான் மாநிலங்களவையின் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும், 35 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும், மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்படுவதற்கான தகுதிகளை பெற்றிருக்கவேண்டும், லாபம் தரும் எந்தவொரு அரசு பதவியும் வகித்தல் கூடாது ஆகியவை துணைக்குடியரசு தலைவர் பதவிக்கு போட்ட்யிடும் வேட்பாளருக்கான தகுதிகள் ஆகும்
 

வெப்துனியாவைப் படிக்கவும்