பஞ்சாபில் எண்ணெய் டேங்கர் லாரியில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். லாரியின் டயர் வெடித்ததால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் டிவைடரில் மோதி, பக்கவாட்டில் கவிழ்ந்து தீப்பிடித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கன்னாவில் தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை ஏற்பட்ட விபத்தில் எண்ணெய் டேங்கர் லாரி தீப்பிடித்தது. இந்த விபத்தில் டேங்கர் லாரி முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. ஆனால் லாரியின் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினர்.
கன்னா பஸ் ஸ்டாண்ட் மேம்பாலத்தை வந்தடைந்தபோது, அதன் டயர் வெடித்து, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி, டிவைடரில் மோதி, பக்கவாட்டில் கவிழ்ந்து தீப்பிடித்தது என்று அதிகாரி கூறினார்.