குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுக்க விடிய விடிய போராட்டம் நடைபெ|ற்று வருகிறது. குறிப்பாக மும்பை, புனே, டெல்லி, ஹைதராபாத்தில் மாணவர்கள் விடிய விடிய போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேபோல் உத்தர பிரதேசம், பீகாரிலும் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. மாணவர்களின் இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு பகுதிகளில் ஆதரவு அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் போதுமான படைகளை பயன்படுத்தி வன்முறையை கட்டுப்படுத்துங்கள் என்றும், பொதுமக்களின் உயிருக்கு அச்சுறத்தல் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கவும் என்றும், சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது