முக்கியமாக மலை பகுதிகளான இடுக்கி, வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய 11 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
மக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தங்களது வீடுகள், உடைமைகள் ஆகியவற்றை இழந்து முகாம்களில் தங்கி வருகின்றனர். கேரள மக்களுக்கு உதவும் வகையில், நாடெங்கும் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.
இதன் காரணமாக கேரளாவில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வரும் 28-ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளதாகவும், அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாகவும், தேர்வுகளுக்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கேரள அரசு அறிவித்துள்ளது.