ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடி ஏற்றுங்கள் - பிரதமர் மோடி
வெள்ளி, 22 ஜூலை 2022 (15:38 IST)
75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஒவ்வொரு வீடுகளிலும் தேசிய கோடி ஏற்ற வேண்டும் என நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
பிரதமர் மோடி தலைமையியான பாஜக அரசு மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சி செய்து வருகிறது.
இந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி 75 வது சுந்ததிர தின விழா கோலாகலமாகக் கொண்டாடபடவுள்ளது.
இதுகுறித்து பிரதமர் மோடி, ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை அனைத்து வீட்டுகளிலும் தேசிய கொடியை ஏற்றுங்கள் என நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ளார்.