9 வயது சிறுமிக்கு எச்ஐவி நோயாளியின் ரத்தம்: மருத்துவமனை கவனக்குறைவு!!
வெள்ளி, 15 செப்டம்பர் 2017 (16:10 IST)
கேரளாவில் 9 வயது சிறுமிக்கு எச்ஐவி நோயளியின் ரத்தம் உடலில் ஏற்றப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் உள்ள புற்றுநோய் சிகிச்சை மையத்தில் இரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாள்.
சிகிச்சையின் போது அந்த சிறுமிக்கு மாற்று இரத்தம் செலுத்தப்பட்டது. அதன் பின்னர் சிறுமியின் உடல் நிலை மிகவும் மோசமானது.
இதனால் வேறு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சிறுமி அனுமதிக்கபட்டாள். அப்பொழுதி சிறுமிக்கு எடுக்கப்பட்ட ரத்த பரிசோதனையில் அவருக்கு எச்ஐவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால், எச்ஐவி நோயாளியின் இரத்தத்தை செலுத்தியதால் தான் சிறுமிக்கு எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.
இதனால், சிறுமியின் சிகிச்சைக்கு தேவையான தொகையை அரசு ஏற்றுக்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.