அம்பலமான திருட்டுத்தனம்: இணையத்தில் மெர்சல் படம் பார்த்த ஹெச்.ராஜா!!
சனி, 21 அக்டோபர் 2017 (17:17 IST)
மெர்சல் படத்தை எதிர்த்து குரல் கொடுத்து வரும் ஹெச்.ராஜா சமீபத்தில் மெர்சல் படத்தை இணையத்தில் பார்த்தாக தெரிவித்துள்ளார்.
பாஜகவின் டிஜிட்டல் இந்தியா, ஜிஎஸ்டி உள்ளிட்ட திட்டங்கள் மெர்சல் படத்தில் விமர்சிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த பாஜகவினர் படத்திற்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர்.
ஆனால், எதிர்கட்சிகளும் சினிமா திரையுலகை சேர்ந்த பலரும் படத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தற்போது மெர்சல் படம் அரசியல் ரீதியில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தனியார் செய்தி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஹெச்.ராஜாவிடம் மெர்சல் படம் பார்த்துவிட்டீர்களா என கேள்வி கேட்கப்படுகிறது.
அதற்கு அவர் பார்த்துவிட்டேன், நெட்டில் பார்த்தேன் என பதிலளிக்கிறார். இணையத்தில் படம் பார்ப்பதை கடுமையாக எதிர்த்து வரும் நிலையில் ஹெச்.ராஜாவின் இந்த பதில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.