குஜராத் முதல் அருணாச்சல பிரதேசம் வரை.. ராகுல் காந்தியின் 2வது கட்ட ஒற்றுமை பயணம்..!

ஞாயிறு, 26 பிப்ரவரி 2023 (17:25 IST)
ஏற்கனவே கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணம் என்ற நடைபயணத்தை வெற்றிகரமாக முடித்த காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அடுத்த கட்டமாக குஜராத் முதல் அருணாச்சலப்பிரதேசம் வரையிலான ஒற்றுமை பயணத்தை நடத்த உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கன்னியாகுமரியிலிருந்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தை ஆரம்பித்தார் என்பதும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இந்த பயணத்தை ஆரம்பித்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பயணம் கேரளா கர்நாடகா ஆந்திரா மகாராஷ்டிரா மத்திய பிரதேசம் உத்தரப்பிரதேசம் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களை கடந்து சமீபத்தில் ஜம்மு காஷ்மீரில் முடிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் அடுத்த கட்டமாக மேற்கு மாநிலமான குஜராத்தில் இருந்து கிழக்கு மாநிலமான அருணாச்சலம் பிரதேசம் வரை இரண்டாம் கட்ட இந்தியா ஒற்றுமை பயணத்தை தொடங்க ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார்
 
இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. குஜராத் மாநிலம் போர்பந்தரில் இருந்து தொடங்கும் இந்த இரண்டாம் கட்ட பயணம் அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் உள்ள காசிகட் நகரில் முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்