ரேசன் கடையில் பொருள் வாங்க மரம் ஏறும் குஜராத் மக்கள்

வெள்ளி, 3 மார்ச் 2017 (17:40 IST)
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஸ்வைப்பிங் மிஷினுக்கு டவர் கிடைக்காமல் ரேசன் கடை ஊழியர்கள் மரம் ஏறி அவதிப்படுகின்றனர்.


 

 
மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ரேசன் கடைகளில் ஸ்வைப் மிஷின் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் உள்ள பெரும் சிக்கல் சிக்னல்தான். மிஷினில் சிக்னல் இல்லை என்றால் வேலை செய்யாது. 
 
குஜராத மாநிலம் உதய்பூர் மாவட்டத்தின் ஓரப்பக்குதி கிராமத்தில் டவர் கிடைப்பது மலை ஏறுவதும் போல் உள்ளது. ரேஷன் கடையில் பணியாற்றும் ஊழியர்கள் மரத்தின் உச்சியில் ஏறி அமர்ந்து கொள்கிறார்கள். இதனால் மக்களும் கைரேகை வைக்க மரம் ஏற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
 
உதய்பூர் மாவட்டத்தில் மொத்தம் 76 ரேசன் கடைகள் உள்ளது. இதில் 13 ரேசன் கடைகள் டவர் தொல்லையால் அவதிப்பட்டு வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்