50 ஆயிரம் பேர் வெளியேற்றம்; குஜராத்தை நெருங்கும் ‘பிபோர்ஜாய்’ புயல்!

வியாழன், 15 ஜூன் 2023 (07:42 IST)
அரபிக் கடலில் உருவான பிபோர்ஜாய் அதி தீவிர புயல் குஜராத் அருகே கரையை கடக்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.



அரபிக் கடலில் உருவான பிபோர்ஜாய் புயல் அதி தீவிர புயலாக வலுவடைந்த நிலையில் தொடர்ந்து வடக்கு நோக்கி நகர்ந்து வந்தது. வானிலை ஆய்வு மைய கணக்கீட்டின்படி இன்று மாலை பிபோர்ஜாய் புயல் பாகிஸ்தான் – குஜராத் இடையே கரையை கடக்க உள்ளது.

இதனால் குஜராத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று மாலைக்குள் குஜராத்தின் பல பகுதிகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். குஜராத் கட்ச் மாவட்டத்தில் மட்டும் அதிக பட்சமாக 18 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

குஜராத்தின் ஜூனாகத், ஜாம்நகர், போர்பந்தர், துவாரகா, தேவ்பூமி, ராஜ்கோட், மோர்பி உள்ளிட்ட மாவட்டங்களில் புயலின் தாக்கம் அதிகமாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் பேரிடர் மீட்பு படையினர், ராணுவத்தினர் தயார் நிலையில் உள்ளனர். ஆங்காங்கே நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு தேவையான மருந்து, உணவு, குடிநீர் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்