எல்.ஐ.சி.க்கு நோட்டீஸ் அனுப்பிய ஜிஎஸ்டி.. ரூ.806 கோடி கேட்டுள்ளதால் பரபரப்பு..!

செவ்வாய், 2 ஜனவரி 2024 (07:31 IST)
எல்ஐசி நிறுவனம் 806 கோடி ரூபாய் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி நிறுவனத்திற்கு மும்பை மாநில வரி துணை ஆணையரிடம் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 2017 - 18 ஆம் ஆண்டுக்கான டிஎஸ்டி நிலுவை மற்றும் வட்டி தொகையாக ரூபாய் 806 உடனே செலுத்த வேண்டும் என்று அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
எல்ஐசி நிறுவனம் இந்த தகவலை உறுதி செய்துள்ள நிலையில் இது குறித்து ஜிஎஸ்டி  அமைப்பிடம் மேல்முறையீடு செய்யப்படும் என்றும் கூறியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்த நோட்டீஸ் நடவடிக்கை காரணமாக எல்ஐசி நிறுவனத்தின் பண பரிவர்த்தனைகள் செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளில் எந்த விதமான பாதிப்பும் இல்லை என்றும் காப்பீடுதாரர்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் எல்ஐசி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்