கடந்த ஆண்டு ஜூலை 1-ந்தேதி, ஜி.எஸ்.டி. அமலுக்கு கொண்டுவரப்பட்டது. ஆகஸ்ட் 2017 முதல் மார்ச் 2018 வரையான காலத்தில் சராசரியாக மாதந்தோறும் ரூ. 89,885 கோடி வசூலானது.
இந்நிலையில் ஏப்ரல் மாதத்தில் ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 458 கோடி ஜி.எஸ்.டி வசூல் ஆகியுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்த பிறகு, ஒரே மாதத்தில் இவ்வளவு வரி வசூலானது இதுவே முதல்முறை ஆகும்.