நவம்பர் 7 முதல் 30 வரை பட்டாசு வெடிக்க தடையா? அதிர்ச்சியில் பொதுமக்கள்!

திங்கள், 2 நவம்பர் 2020 (17:24 IST)
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையை நவம்பர் 14ஆம் தேதி கொண்டாட இருக்கும் நிலையில் நவம்பர் 7 முதல் நவம்பர் 30 வரை பட்டாசு வெடிப்பதை தடை செய்யலாமா எனக் கேட்டு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
ஜல்லிக்கட்டு தீபாவளி உள்பட இந்து மக்கள் கொண்டாடும் பண்டிகையை மட்டுமே குறிவைத்து சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதற்கு இந்து மத மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நவம்பர் 14ஆம் தேதி தீபாவளியன்று இந்திய மக்கள் அனைவரும்  பட்டாசு வெடித்துக் கொண்டாட இருக்கும் நிலையில் திடீரென நவம்பர் 7 முதல் அம்மாதம் முழுவதும் பட்டாசு வெடிப்பதை தடை செய்யலாமா என பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
லட்சக்கணக்கான பட்டாசு ஊழியர்களின் ஒரு வருட உழைப்பு அந்த தீபாவளி ஒரு வாரத்தில் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்பதும் அவர்களுடைய ஒரு வருட வாழ்வாதாரம் அதில்தான் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த வாழ்வாதாரத்தை சிதைக்கும் நோக்குடன் பசுமை தீர்ப்பாயம் பட்டாசு வெடிப்பதை தடை செய்யலாமா எனக் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தேர்தல் நேரத்தில் அரசியல்வாதிகளும், புத்தாண்டு தினத்தில் பிற மதத்தினரும் பட்டாசு வெடிக்கும் போது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காத பசுமை தீர்ப்பாயம் இந்து மக்கள் கொண்டாடும் பண்டிகைக்கு மட்டும் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது ஏன் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்