ஆனால் அந்த குறையையும் தீர்க்க இப்போது புது முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இனி, இந்தியாவில் விமானப் பயணத்தின் போது இணையம் மற்றும் மொபைல் அழைப்பு வசதிகளைப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்குவதற்கான நடவடிக்கையில் அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்காகச் சிறப்பு உள் அமைச்சரவைக் குழு ஒன்றை அமைக்க முடிவெடுத்துள்ளது.
அமைக்கப்பட இருக்கும் இந்தக்குழு 15 நாட்களுக்கு ஒருமுறை கூட்டம் நடத்தி இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து ஆலோசித்து திட்டத்தை வரையறுக்க உள்ளது. மார்ச் மாதம் இறுதியில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கபடுகிறது. இக்கூட்டத்தில் விமான நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.