விற்பனைக்கு வந்த பாரத் பெட்ரோலியம்!

சனி, 7 மார்ச் 2020 (15:09 IST)
பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் அரசு பங்குகள் விற்பனைக்கு வந்துள்ளது.
 
பட்ஜெட் தாக்கலில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு சலுகைகளையும், நிதி நிலை அறிக்கைகளையும் வெளியிட்டார். அதில் அரசின் பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சியின் பங்குகளை தனியாருக்கு விற்கும் திட்டமும் அடக்கம். இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது. 
 
இதனைத்தொடர்ந்து தற்போது பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் அரசுக்கு உள்ள 53 விழுக்காடு பங்குகளை வாங்க விருப்பம் தெரிவிப்பவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை அரசு வரவேற்றுள்ளது.
 
பொதுத்துறை நிறுவனங்களில் அரசுக்கு உள்ள பங்குகளை விற்று நிதி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்தை அடுத்து பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் அரசு பங்குகள் விற்பனைக்கு வந்துள்ளது என தெரிகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்