ஏர் இந்தியா நிறுவனம் நிதி நெருக்கடியில் செயல்பட்டு வருகிறது. இதனால், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களுக்கு எரிபொருளுக்கான பல ஆயிரம் கோடி ரூபாய் நிலுவை தொகையை செலுத்தாமல் காலம் கடத்தி வந்துள்ளது.
இதனால், அந்நிறுவனங்கள் நிலுவைத் தொகையை செலுத்த இனியும் தவறினால் சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட 6 முக்கிய விமான நிலையங்களில் வரும் 18 ஆம் தேதி முதல் எரிபொருள் வினியோகத்தை நிறுத்தப்போவதாக எச்சரித்துள்ளது.
இதற்கு முன்னர் ரூ.5000 கோடி நிலுவை தொகையை காரணம் காட்டி கொச்சி, மொஹாலி, புனே, ராஞ்சி, பாட்னா, விசாகப்பட்டினம் ஆகிய விமான நிலையங்களில் எரிபொருள் வினியோகத்தை எண்னெய் நிறுவனங்கள் நிறுத்தின என்பது குறிப்பிடத்தக்கது.