அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனையில் பணிபுரிய தடை!

வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (17:28 IST)
அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனையில் பணிபுரிய தடை விதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஆந்திராவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் தனியார் மருத்துவமனை மற்றும் தனியார் கிளினிக்கில் பணியாற்றக் கூடாது என்று உத்தரவு உள்ளது
 
இதுசுகாதார விடுதிகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் இந்த உத்தரவை ஆந்திர அரசின் சுகாதாரத்துறை பிறப்பித்துள்ளது
 
அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனையில் பணி புரிந்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்