3700 கோடி ரூபாயில் தயாராகும் டிஜிட்டல் கிராமங்கள்

வெள்ளி, 8 செப்டம்பர் 2017 (15:50 IST)
நாடு முழுவதும் உள்ள 5.5 லட்சம் கிராமங்களுக்கு வைஃபை வசதி தரும் திட்டத்தின் ஆயத்தப்பயணிகள் தீவிரமாக நடப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


 

 
டிஜிட்டல் இந்தியாவில் டிஜிட்டல் கிராமங்களை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி முதல் கட்டமாக நட்பு இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு லட்சம் கிராமங்களில் வைஃபை வசதி அமைக்க உள்ளதாக தொலைத்தொடர்பு துறை செயலாளர் அருணா சுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
 
இந்த திட்டத்திற்காக மத்திய அரசு ரூ.3700 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும், வினாடிக்கு 1 Gbps என்ற அதிவேகத்தில் இண்டர்நெட் சேவை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்