புளூவேல் விபரீதம் ; ஆற்றில் குதிக்க சென்ற மாணவி மீட்பு

செவ்வாய், 5 செப்டம்பர் 2017 (15:38 IST)
புளூவேல் விளையாட்டி ஆடியதன் மூலம் ஆற்றங்கரையில் சென்று  தண்ணீரில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற ஜோத்பூர் மாணவியை போலீசார் காப்பாற்றியுள்ளனர்.


 

 
புளூவேல் விளையாட்டை விளையாடி தனது உயிரை இளைஞர்கள் பலர் மாய்த்துக்கொள்ளும் சம்பவம் உலகம் முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விளையாட்டு இந்தியாவில் பரவி, தமிழ் நாட்டிலும் பரவியுள்ளது சமீபத்தில் தெரியவந்துள்ளது.
 
அதை நிரூபிக்கும் வகையில் மதுரையில் ஒரு இளைஞர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். அதேபோல், பாண்டிச்சேரியில் ஒரு பெண் வங்கி ஊழியரை போலீசார் சமீபத்தில் மீட்டனர். 
 
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் இந்த விளையாட்டை ஆடி ஆற்றில் குதித்து தற்கொலை செய்ய முயன்ற போது போலீசார் அவரை காப்பாற்றியுள்ளனர். நேற்று இரவு வீட்டை விட்டு வெளியேறிய அவர் ஆற்றங்கரையோரம் நின்று கொண்டு தற்கொலைக்கு முயன்ற போது போலீசார் அவரை மீட்டனர். அவரது கையில் திமிங்கிலத்தின் வரைபடத்தை அவர் வரைந்து வைத்துள்ளார். அதைத் தொடர்ந்து அவருக்கு தகுந்த மனநல ஆலோசனைகளை அளிக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்