மணப்பெண்ணிற்கு அசோக் தாலி கட்ட தயாரான போது, அங்கு கையில் துப்பாக்கியுடன் நுழைந்த அவரின் காதலி வர்ஷாசாகு, அசோக்கை அங்கிருந்து கடத்தி சென்றார். எனவே, இவர்களின் காதல் விவகாரம் மணப்பெண்ணின் தந்தைக்கு தெரியவர, அவர் அசோக்கின் மீது புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் அசோக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரை யாரும் ஜாமீனுக்கு எடுக்க முன்வராத சூழ்நிலையில், வர்ஷாசாகுவே, அவரை ஜாமீனில் எடுத்து, உள்ளூர் பிரமுகர்கள் முன்னிலையில் திருமணமும் செய்து கொண்டார்.