ராகுல்காந்தியின் நடைபயணம் பற்றி காந்தியின் பேரன் கருத்து

வெள்ளி, 18 நவம்பர் 2022 (18:28 IST)
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி  கன்னியாகுமரி முதல் காஷ்மீர் தேச ஒற்றுமை  என்ற பெயரில்  நடைப்பயணம் சென்று வருகிறார்.

இந்தப் பயணத்தில், தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களைக் கடந்து, தற்போது,  மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபயணத்தை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், இப்பயணம் குறித்து,  மகாத்மா காந்தியின் பேரன், துஷார் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். அதில்,    நடைப்பயணங்கள் இந்திய கலாச்சாரத்தின் அங்கம். இது பல புரட்சிகளுக்கு வழி வகுத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த  பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கு கட்சியைப் பலப்படுத்தவும் மக்களிடையே காங்கிரஸ் கட்சியைக் கொண்டு செல்லவும் இப்பாத யாத்திரை பயணம் உதவும் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றானர்.

Edited by Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்