கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல்கட்ட ஊரடங்கும், ஏப்ரல் 14 முதல் இரண்டாம் கட்ட ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்ட நிலையில் மே 4ஆம் தேதி முதல் மூன்றாம் கட்ட ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு வரும் 17ஆம் தேதி முடிவுக்கு வருகிறது
இந்த நிலையில் இன்று முதல் இயங்கும் ரயில்கள் குறித்த விவரங்களை தற்போது பார்ப்போம்: டெல்லியில் இருந்து இன்று 3 ரயில்கள் திப்ரூகர், பெங்களூரு மற்றும் பிலாஸ்பூருக்கு புறப்படுகின்றன. மேலும் ஹவுரா, பாட்னா ராஜேந்திரா நகரில் இருந்து டெல்லிக்கு இன்று 3 ரயில்கள் இயக்கப்படுகின்றன
மெலும் மே 14ஆம் தேதி டெல்லியில் இருந்து புவனேஸ்வருக்கு ஒரு ரயில் இயக்கப்படுகிறது. அதேபோல் மே 15ஆம் தேதி திருவனந்தபுரம், சென்னையில் இருந்து டெல்லிக்கு 2 ரயில்கள் இயக்கப்படுகிறது என்பதும், மேலும் ஒரு ரயில் டெல்லியில் இருந்து மட்கோனுக்கு இயக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து மே 17ஆம் தேதி மட்கோனில் இருந்து டெல்லிக்கும், டெல்லியில் இருந்து செகந்திரபாத்துக்கும் ரயில்கள் இயக்கப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மே 18ஆம் தேதி 3 ரயில்களும் மே 20-ல் 2 ரயில்களும் இயக்கப்படும் என ரயில்துறை அறிவித்துள்ளது. ஊரடங்கில் 2 மாதங்களுக்குப் பின் ரயில் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பதும் இன்று மட்டும் 8 சிறப்பு ரயில்கள் இன்று இயக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது