இந்தியாவில் கடந்த சில மாதங்களாக அடிக்கடி ரயில் விபத்துக்கள் ஏற்பட்டு வரும் நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் இன்று சரக்கு ரயில் ஒன்றிய தடம் புரண்டதால் அந்த வழியாக செல்லும் 20 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் பெத்தபள்ளி என்ற பகுதியில் சரக்கு ரயில் திடீரென தடம் புரண்டதால் 20 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், அந்த வழியாக செல்லும் 10 ரயில்கள் திருப்பி விடப்பட்டுள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரும்பு தாது ஏற்று சென்ற சரக்கு ரயிலின் 11 பெட்டிகள் தடம் புரண்டதாகவும், இது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும், தடம் புரண்ட பெட்டிகளை மீண்டும் தண்டவாளத்தில் தூக்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளன.