முன்னாள் டிஜிபியை கத்தியால் குத்தி கொலை செய்த மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

Siva

திங்கள், 21 ஏப்ரல் 2025 (10:02 IST)
கர்நாடக மாநில முன்னாள் டிஜிபிஐ அவருடைய மனைவி கத்தியால் குத்தி கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கர்நாடக மாநில முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் என்பவரை, அவரது மனைவி பல்லவி என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளதாக தெரிகிறது.
 
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அதிகாரிகள், படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த ஓம் பிரகாஷின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து, அவருடைய மனைவியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
நேற்று ஓம் பிரகாஷ் மற்றும் அவரது மனைவி பல்லவி ஆகிய இருவருக்கும் இடையே சொத்து விவகாரம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அந்த வாக்குவாதம் கடுமையாக மாறிய நிலையில், சமையலறையில் இருந்த இரண்டு கத்திகளை எடுத்து ஓம் பிரகாஷின் கை, கால், கழுத்து, தலை மற்றும் பின்புறத்தில் பல்லவி குத்தியதாகவும் தெரிகிறது.
 
இதனைத் தொடர்ந்து ஓம் பிரகாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவசர கட்டுப்பாட்டு அறிக்கைக்கு தொடர்பு கொண்டு பல்லவி கூறியதையடுத்து, போலீசார் அவரை கைது செய்தனர்.
 
இந்த சம்பவத்தின் போது அவருடைய மகளும் அதே வீட்டில் இருந்ததாகவும், ஆனால் அவருக்கும் இந்த கொலைக்கும் தொடர்பு இல்லை என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
 
இது குறித்து ஓம் பிரகாஷின் மகனுக்கு காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். அவர் விரைந்து வந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. பல்லவியிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
 
இந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்