கூட்டுறவு சங்கங்களை இணைக்கும் மத்திய அரசின் இ-சந்தை! – மத்திய கூட்டுறவு அமைச்சகம்!

வியாழன், 2 ஜூன் 2022 (15:55 IST)
நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்கள், அதன் வியாபாரிகள் பயனடையும் வகையில் மத்திய கூட்டுறவுத்துறை அமைச்சகம் இ-சந்தை தளம் ஒன்றை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய கூட்டுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

தொலைநோக்கு பார்வை கொண்ட பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை அரசு இ-சந்தை தளத்தில் கூட்டுறவு சங்கங்களை ‘வாங்குவோராக’ பதிவு செய்ய ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் ஒரே தளத்தில் 45 லட்சத்திற்கும் அதிகமான வியாபாரிகளை எளிதாக அடைவதற்கும், வெளிப்படைத்தன்மை, பயன்பாடு மற்றும் குறைந்த செலவிலான கொள்முதல் முறையை அடைவதற்கும், கூட்டுறவு சங்கங்களுக்கு உதவும்.

மத்திய கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித்ஷா தலைமையின் கீழ் கூட்டுறவு அமைச்சகம் பல்வேறு மாநில கூட்டுறவு சங்கங்கள், மாநில கூட்டுறவு சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றை அவற்றின் உறுப்பினர்கள் பயனடைவதற்காக அரசு இ-சந்தை தளத்தில் இணைக்க, ஊக்கப்படுத்தியுள்ளது. இந்த தளத்தில் இணைவதன் மூலம் கூட்டுறவு சங்கங்கள் மேலும், மேலும் பயனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்