விவசாயிகள் - மத்திய அரசு: தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை!

வெள்ளி, 8 ஜனவரி 2021 (18:44 IST)
விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 8 ஆம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. 

 
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரொ விவசாயிகள் பலர் டெல்லியில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அவர்களிடம் மத்திய அரசும் பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 
 
விவசாயிகள் வேளாண் சட்டங்களை முழுவதும் திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் சட்ட திருத்தங்கள் மட்டுமே செய்ய முடியும் என அரசு தரப்பில் கூறப்பட்டதால் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.  
 
இந்நிலையில், விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 8 ஆம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. எனவே மீண்டும் ஜனவரி 15 ஆம் தேதி 9 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்