பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களை இயற்றியது. இதற்கு எதிராக தமிழகம், டெல்லி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் இந்தச் சட்டத்தை நீக்க வேண்டுமெனக் கோரி டெல்லியில் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில் ஹரியானாவில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகள், அந்த மாநில துணை சபாநாயகரின் காரை அடித்து நொறுக்கினர். இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த விவகாரத்தில் சுமார் 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் மீது தேச விரோத சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.