டெல்லியில் தொடர்ந்து ஒரு மாதத்துக்கு மேலாக் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் விவசாயிகள். இந்நிலையில் டெல்லியில் சிங்கு எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் தங்களின் ரத்தத்தை மையாக மாற்றி பிரதமருக்கு கடிதம் எழுதியும், கடும் குளிரிலும் வெயிலும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பல கட்டங்களாக மத்திய அரசுடன் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் 6 கட்டமாக நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை ஜனவரி 4 ஆம் தேதி நடக்க உள்ளது.
இந்நிலையில் அந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தால் ஜனவரி 26 ஆம் தேதி டெல்லியில் நடக்கும் குடியரசு தின விழாவுக்கு டிராக்டர்களில் பேரணியாக வருவோம் என விவசாயிகள் சங்க தலைவர் தர்ஷன் பால் சிங் தெரிவித்துள்ளார். இந்த விழாவில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கலந்துகொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.