அதிக அளவில் போலி ரேசன் அட்டைகள்: உபி முதலிடம்

வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (17:35 IST)
இந்தியாவிலேயே அதிக அளவு போலி ரேஷன் அட்டைகள் உள்ள மாநிலங்கள் குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ள நிலையில் அதில் முதலிடத்தில் உத்தரப்பிரதேச மாநிலம் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இந்தியாவில் பல மாநிலங்களில் போலி ரேஷன் அட்டைகள் இருப்பதால்தான் ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை என்ற முறை கொண்டுவரப்பட்டது 
 
இருப்பினும் இந்த திட்டத்தை இன்னும் சில மாநிலங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்தியாவில் அதிக போலி ரேஷன் அட்டைகள் உள்ள மாநிலம் உத்தரப்பிரதேச மாநிலம் என்றும், அம்மாநிலத்தில் மட்டும் 1.70 கோடி போலி ரேஷன் அட்டைகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது
 
இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை பொதுமக்களுக்கு அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்