பிஹார் மாநிலத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் ஊரகத்துறை அமைச்சராகவும் இருந்த ரகுவன்ஷ் பிரசாத் சிங் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு பின்னர் குணமானார். அதன் பின்னர் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக இப்போது உயிரிழந்துள்ளார்.