வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம் அதிகரிப்பு.. தேர்தல் காரணமா?

Siva

ஞாயிறு, 11 பிப்ரவரி 2024 (11:35 IST)
கடந்த 2021 - 22 ஆம் ஆண்டில் வருங்கால வைப்பு நிதியின் வட்டி குறைக்கப்பட்ட நிலையில் தற்போது வருங்கால வைப்பு நிதியின் வட்டி அதிகரிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது தேர்தலை கணக்கில் கொண்டா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

கடந்த 2015 - 2016 ஆம் ஆண்டில் 8.8 சதவீதமாக இருந்த வருங்கால வைப்பு நிதி வட்டி 2021 - 22ல் 8.1 சதவிகிதம் என குறைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம் 8.25 சதவீதம் என உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது

2023 - 24 ஆம் நிதி ஆண்டுக்கான வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம் 8.25 சதவீதம் என உயர்த்தப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சகத்தின் ஒப்புதல் பெற்ற பின்னர் உயர்த்தப்பட்ட வட்டி விகிதம் ஊழியர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

நாடாளுமன்றத்திற்கு வரும் ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தேர்தலில் கணக்கில் கொண்டு வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்