EPFO வட்டி விகிதம் 8.25 சதவீதம் ஆக உயர்வு

Sinoj

சனி, 10 பிப்ரவரி 2024 (20:10 IST)
தொழிலாளர்காளின் EPFO வட்டி விகிதம் 8.25 சதவீதம்  ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மத்தியில்  பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சமீபத்தீல், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார்.
 
வரும் தேர்தலில் வெற்றி பெற்று முழுமையான பட்ஜெட்டை பாஜக தாக்கல் செய்யும் என  கூறப்பட்டது.
 
இந்த நிலையில்,  EPFO வட்டி விகிதம் 8.25 சதவீதம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
 
அதாவது, பணியாளர் வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம் 8.15 சதவீதத்தில் இருந்து 8.25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் பயனாளர்களின்  கணக்குகளில் வட்டி தொகை வரவு  வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்