மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது; சஞ்சய் நிருபம்

திங்கள், 18 டிசம்பர் 2017 (19:42 IST)
வாக்குப்பதிவு இயந்திரங்கள் இந்திய ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்று சஞ்சய் நிருபம் குற்றம் சாட்டியுள்ளார்.

 
நடந்து முடிந்த இமாச்சல் பிரதேசம் மற்றும் குஜராத் சட்டமன்ற தேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேசத்தில் பாஜக வெற்றிப்பெற்றது. பாஜக வெற்றிக்கு வாக்குப்பதிவு இயந்திரமே காரணம் என மகராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
குஜராத் முழுவதும் பாஜக எதிரான அலை வீசியது. பிரதமர் மோடியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தின் போது கூட பல இடங்களில் இருக்கைகள் காலியாக இருந்தன. இந்நிலையில் பாஜகவுக்கு கிடைத்த வெற்றி மக்களால் கிடைத்த வெற்றி இல்லை. வாக்குப்பதிவு இயந்திரத்தால் கிடைத்த வெற்றி ஆகும். 
 
துவக்கத்தில் இருந்தே எங்களுக்கு இந்த சந்தேகம் இருந்தது. வாக்குப்பதிவு இயந்திரம் இந்திய ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்