இமாச்சலில் பாஜக 44 தொகுதிகளில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் பாஜக சார்ப்பில் முதல்வர் வேட்பாளராக போட்டியிட்ட பிரேம் குமார் துமல், சுஜான்பூர் தொகுதியில் தோல்வி அடைந்துள்ளார். அதே தொகுதில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரஜிந்தர் ராணா 15,656 பெற்றுள்ளார். பிரேம் குமார் துமல் 12,836 வாக்குகள் பெற்றுள்ளார்.