பாரதமாதா கோவில் பூட்டை உடைத்த வழக்கு; பாஜகவின் ராமலிங்கத்திற்கு ஜாமின்!

புதன், 24 ஆகஸ்ட் 2022 (21:15 IST)
பாரத மாதாவின் கோவில் பூட்டை உடைத்து நுழைந்த பாஜகவின் மாநில துணைத் தலைவர் ராமலிங்கம் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. 
 
கடந்த 11ம் தேதி பாஜகவினர் தர்மபுரியில் ஊர்வலம் சென்றபோது பாஜக மாநிலத் துணைத் தலைவர் ராமலிங்கம் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாரத மாதா கோவிலுக்கு செல்ல முயன்றனர்
 
அப்போது கோவில் கதவு பூட்டப்பட்டிருந்ததை அடுத்து கதவை திறக்குமாறு காப்பாளரிடம் கேட்டார்.  காப்பாளர் உள்ளே செல்ல அனுமதி இல்லை என்று கூறியதை அடுத்து இராமலிங்கம் பாரதமாதா நுழைவாயிலின் கேட்டை உடைத்து உள்ளே சென்றார்
 
இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அவர் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்