புதிய ஆப்பை அறிமுகம் செய்த தேர்தல் ஆணையம்!!

வெள்ளி, 27 ஜனவரி 2017 (14:50 IST)
இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தொடர்பான அனைத்து விவரங்கள் அடங்கிய ஒருங்கிணைந்த புதிய ஆப் (ECI APPS) ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. 


 
 
இந்த புதிய ஆப்பின் மூலமாக தேர்தல் செயல்பாடுகள், தேர்தல் நடைபெறும் நாட்கள், வாக்குசாவடி, வாக்காளரின் விவரங்கள் போன்ற அனைத்து தகவலகளையும் அறிய முடியும்.
 
மேலும் மக்கள் வாக்காளர்கள், வேட்பாளர்கள், ஊடகம், அலுவலர்கள், அரசியல் கட்சிகள் ஆகிய பிரிவுகள் இந்த ஆப்பில் இடம்பெற்றுள்ளது. 
 
ஆண்ட்ராய்டு வெர்சன் 4.1 மற்றும் அதற்கு அதிகமான வெர்சங்கள் உள்ள மொபைலில் மட்டுமே இந்த ஆப்பை பயன்படுத்த முடியும்.
 
விரைவில் ஐபோனுக்கு இந்த ஆப் அறிமுகப்படத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்