குடியரசு தலைவரை சந்திக்கிறது இந்திய தேர்தல் ஆணைய குழு.. பெரும் பரபரப்பு..!

Mahendran

வியாழன், 6 ஜூன் 2024 (10:37 IST)
குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை இன்று மாலை 4 மணிக்கு இந்திய தேர்தல் ஆணைய குழு சந்திக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.
 
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்கள் பட்டியல், எந்தெந்த கட்சியில் எத்தனை எம்.பி.க்கள் என்பது குறித்த பட்டியலை இந்திய தேர்தல் ஆணைய குழு  வழங்க உள்ளனர்
 
மத்திய அமைச்சரவை பரிந்துரைப்படி, 17வது மக்களவையை கலைத்து குடியரசு தலைவர் நேற்று உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் 18வது மக்களவையை அமைப்பதற்கான பணிகளை குடியரசு தலைவர் தொடங்கியுள்ளார். இந்த நிலையில் புதிய எம்பிக்களின் பட்டியலை தேர்தல் ஆணைய குழு இன்று வழங்குகிறது.
 
அரசியல் சாசன சட்டப்படி, தேர்தல் ஆணையம் குடியரசு தலைவரை சந்தித்து புதிய எம்.பி.க்கள் பட்டியலை வழங்க வேண்டியது அவசியம் என்பது விதிமுறை ஆகும். எம்பிக்களின் பட்டியலை அடிப்படையாக கொண்டு 18வது மக்களவை, புதிய ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை குடியரசு தலைவர் தொடங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்