இன்றுடன் தேர்தல் நடத்தை விதிகள் விலக்கம்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

Siva

வியாழன், 6 ஜூன் 2024 (07:24 IST)
இன்றுடன் தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 
 
இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டமாக நடந்த நிலையில் தேர்தல் அறிவிப்பு வெளியான நாளிலிருந்து தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. 
 
இதன் காரணமாக ஆவணங்கள் இன்றி ரூ.50000க்கு மேல் கொண்டு செல்லக்கூடாது என்றும் அதற்கு மேல் கொண்டு செல்லப்படும் ரொக்கம் மற்றும் தங்க நகைகளுக்கு தகுந்த ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 
 
இதனை அடுத்து சுற்றுலா சென்ற சுற்றுலா பயணிகள் உள்பட 50 ஆயிரத்துக்கும் அதிகமாக பணம் வைத்திருந்தவர்கள் தேர்தல் ஆணைய அதிகாரிகளால் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார்கள் என்றும் இதனால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் ஜூன் 6 வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில் இன்றுடன் தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர். 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்