இதைத்தொடர்ந்து, இவர்களது இரு தரப்பினரும் ஒன்றாக பேசி சமரசம் செய்து வைக்க வேண்டும் என்றும், உங்களை தம்பதியினராகப் பார்ப்பதையே நீதிமன்றம் விரும்புகிறது என்றும் நீதிபதிகள் ஆலோசனை வழங்கினர்.
முன்பெல்லாம் திருமண பந்தம் தொடர்பான ஒரு சில வழக்குகள்தான் நீதிமன்றத்துக்கு வரும். ஆனால், தற்போது தனிநபர் உரிமை என்ற பெயரில் பெண்கள், அவர்களுக்கு ஆதரவான சட்டங்களை கொண்டு சிலர் தவறாக பயன்படுத்தி வருவதும், மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை போன்றவற்றால் நீதிமன்றங்களில் குடும்பப் பிரச்னை தொடர்பான வழக்குகள் தொடர்வதும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது.