இந்த நிலையில் ப. சிதம்பரத்தின் உறவினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சென்னை, கொல்கட்டா உள்பட 6 இடங்களில் சோதனை நடந்து வருவதாகவும், சென்னையில் கைலாசம், ராம்ஜி நடராஜன், சுஜய் சுப்ரமூர்த்தி வீடுகளிலும், கொல்கட்டாவில் மனோஜ் மோகன்கா வீட்டிலும் சோதனை நடப்பதாகவும் தெரியவந்துள்ளது. முன்னாள் மத்திய நிதியமைச்சர் உறவினர்கள் வீடுகளில் சோதனை நடந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.