பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் பற்றிய வதந்திக்கு அவரது மகள் மறுப்பு

செவ்வாய், 10 அக்டோபர் 2023 (17:31 IST)
நோபல் பரிசு வென்ற பொருளாதாதார அறிஞர் அமர்த்தியா சென் பற்றிய வதந்திக்கு அவரது மகள் விளக்கமளித்துள்ளார்.
 
அமர்த்தியா சென்  கடந்த 1933 ஆம் ஆண்டு  நவம்பர் 3 ஆம் தேதி பிறந்தவர் ஆவார். இந்தியாவைச் சேர்ந்த இவர் 1988 ஆம் ஆண்டு பொருளாதாரரத்திற்கான நோபல் பரிசு பெற்றார்.

அதன்பிறகு 1999 ஆம் ஆண்டு பாரத ரத்னா விருதும் பெற்றார்.

இவருக்கு,சமீபத்தில்  சமூக அறிவியலுக்கான பிரிவில், வறுமை மற்றும் பஞ்சங்கள் பற்றிய அவரது ஆய்வுக்கும் பங்களிப்பும் செய்ததற்ககாக ஸ்பெயின் நாட்டின் உயரிய விருதான பிரின்சஸ் ஆப் ஆஸ்டிரியாஸ் விருது வழங்கப்பட்டது.

இந்த நிலையில் நோபல் பரிசு வென்ற பொருளாதாதார அறிஞர் அமர்த்தியா சென்(89), இன்று காலமானதாக இணையதளங்களில் வதந்திகள் பரவிய நிலையில் அவரது மகள் 'இது பொய்யான செய்தி' என்று கூறியுள்ளார். மேலும்,  'அமர்த்தியா சென்ற நலமுடன் இருப்பதாக' தெரிவித்துள்ளார்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்